ஜீ தமிழ் – ‘ஒரு கை ஓசை’ தொடர்…

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் ‘ஒரு கை ஓசை’.

நிர்வானா டெலிவிஷன் லிமிடெட் தயாரிக்க, பிரியன் இத் தொடரை இயக்கி வருகிறார்.

வேறொரு பெண்ணுடன் தொடர்புடைய தன் கணவன் பாலுவை வெறுத்த வசந்தி தன் பிள்ளைகளுடன் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்க, வசந்தியை பலமிழக்கச் செய்யும் உபாயம் அறிந்த பாலு தன் மீது மிகுந்த அன்பு கொண்ட தன் இரண்டாவது மகளான நவ்யாவை தந்திரமாக தன்னுடன் வந்து சேர செய்கிறான்.  இது போதாதென்று பாலு தன் மூத்த மகளான நிகிதாவை தன் பக்கம் இழுக்க முயற்சி செய்கிறான்.

நிகிதா அவ்வப்போது, தான் என்றும் அம்மாவை விட்டுச் செல்ல மாட்டேன் என்று கூறினாலும், வசந்தி அடி வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருப்பதை போலவே உணர்கிறாள்.  ஒரு நாள் நிகிதாவை ரவுடிகள் துரத்த, அவர்களிடமிருந்து பாலு காப்பாற்றும் போது பெரும் பாதிப்புக்குள்ளாகிறான். நவ்யா இதையே காரணம் காட்டி நிகிதாவை தம்முடன் வர வற்புறுத்த நிகிதா யோசனை செய்யத் தொடங்குகிறாள்.

ஒரு நாள் வேறு வழியின்றி மாயாவின் வீட்டுற்கு வரும் வசந்தியின் மீது கொலைப் பழி விழ, வசந்தி மற்றும் குழந்தைகள் எவ்வளவு மன்றாடியும் போலீஸ்ஸ் வசந்தியை கைது செய்து விடுகிறது.  அதே சமயம் வசந்தியின் குடும்பத்தை பழி வாங்கத் துடிக்கும் சொர்ணா ஜெயிலிலிருந்து விடுதலை ஆகிறாள்.

வசந்தி ஏன் மாயாவின் வீட்டிற்கு வந்தாள்? அவள் கொலை செய்ததாகக் கூறப்படும் நபர் யார்…? விடுதலையான சொர்ணா இனி என்ன செய்யப் போகிறாள் போன்ற பரபரப்பான திருப்பங்கள் இனி வரும் நாட்களில் நடக்கவிருக்கின்றன.

சுஜிதா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘ஒரு கை ஓசை’ நெடுந்தொடரை திங்கள் முதல் வெள்ளி வரை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.