விஜய் டிவி – பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சிகள்…

அறுவடைத் திருநாளான ‘தைப் பொங்கல்’, உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பாரம்பரியமாக கொண்டாடப்படும் இந்த விழா, உணவை விளைவிப்பதற்கு உதவியாக இருந்த சூரியக் கடவுள், மழை மற்றும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கடைபிடிக்கப்படுகிறது.

இந்தக் கொண்டாட்ட தருணத்தில், ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய இருதினங்களுக்கும் தன்னுடைய வித்தியாசமான நிகழ்ச்சிகள் மற்றும் பிளாக் பஸ்டர் திரைப்படங்கள் மூலம் உங்களை மகிழ்விக்கப் போகிறது விஜய் டி.வி.

வியாழன், ஜனவரி 15, 2015

காலை 7 மணி – வணக்கம் தமிழா

தமிழ் சினிமா பிரபலங்கள், கிராமங்களில் பொங்கல் கொண்டாடும் சுவையான நிகழ்ச்சி.

காலை 8 மணி – பொங்கல் சிறப்பு பட்டிமன்றம்

தமிழர் தொடர்பான தலைப்பில், பேச்சாளர்கள் மோதிக் கொள்ளும் சுவாரசியமான பட்டிமன்றம்.

காலை 9 மணி – சூர்யாவின் அகரம் இப்போ சிகரமாச்சு

அகரம் பவுண்டேஷனின் செயல்பாடுகள் பற்றி சூர்யா, கார்த்தி இருவரும் விளக்கும் புத்தம் புதிய நிகழ்ச்சி. அகரம் பவுண்டேஷன் மூலமாக வளர்ச்சி அடைந்தவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். அத்துடன், சமூக அக்கறையுள்ள படைப்பாளிகளான வெற்றிமாறன், பா.ரஞ்சித், ராம் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.

காலை 11 மணி – மெட்ராஸ் – புத்தம் புதிய திரைப்படம்

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் சாதனை புரிந்த இந்தப் படத்தில், கார்த்தியும், புதுமுகம் கேத்ரின் தெரேசாவும் நடித்திருந்தனர். வடசென்னை மக்களின் வாழ்க்கையை இயல்பாக அப்படியே பிரதிபலித்திருந்த இந்தப் படத்தை, ‘அட்டகத்தி’ படத்தை இயக்கிய பா.ரஞ்சித் இயக்கியிருந்தார். சந்தோஷ் நாராயணின் இசையில் வெளியான பாடல்கள், 2014ஆம் ஆண்டின் முக்கிய இடத்தைப் பிடித்தன.

பிற்பகல் 2 மணி – சிகரம் தொடு – புத்தம் புதிய திரைப்படம்

விக்ரம் பிரபு, சத்யராஜ் நடித்துள்ள இந்தப் படம், அப்பா – மகன் பாசத்தை மையமாக வைத்து வெளியான ஆக்‌ஷன் த்ரில்லர் படம். முழுவதும் ஆக்‌ஷன் காட்சிகள் நிரம்பிய, போலீஸ் கதையைக் கொண்ட இந்தப் படம், எதிர்பாராத கிளைமாக்ஸை கொண்டது.

மாலை 5 மணி – காஃபி வித் டிடி

இயக்குநர் ஷங்கருடன், தொகுப்பாளினி டிடி கலந்துரையாடும் நிகழ்ச்சி. இதில், தன்னுடைய சுவாரசியமான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார் ஷங்கர்.

மாலை 6 மணி – மான் கராத்தே – திரைப்படம்

சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடிப்பில் வெளிவந்த பேண்டஸி படம். ரொமான்ஸ், காமெடி, ஆக்‌ஷன் என அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்து எடுக்கப்பட்ட படம்.

இரவு 9.30 மணி – நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம்

விஜய் டி.வி.யின் முதன்மை நிகழ்ச்சியான இது, முழுக்க முழுக்க பொழுது போக்கு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிறது. விஜய் டி.வி.யின் பிரபலமான முகங்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். மறுநாளும், இதே நேரத்தில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.

இரவு 10.30 – ஆரண்ய காண்டம் – திரைப்படம்

பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், ரவிகிருஷ்ணா, சம்பத் நடித்துள்ள ஆக்‌ஷன் படம். தியாகராஜன் குமாரராஜா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். எஸ்.பி.பி. சரண் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

வெள்ளி, ஜனவரி 16, 2015

காலை 8 மணி – இயக்குநர், நடிகர் சேரன், தன்னுடைய ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ திரைப்படம் பற்றி பேசுகிறார்.

காலை 9 மணி – மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி. எப்போதுமே புகழுடன் விளங்கிய எம்.ஜி.ஆரின் மறக்க முடியாத சம்பவங்களை இந்த நிகழ்ச்சி மூலம் கண்டு ரசிக்கலாம்.

காலை 11 மணி – ஜிகர்தண்டா – புத்தம் புதிய திரைப்படம்

மதுரைப் பின்னணியில் உருவான கேங்ஸ்டர் படம். ‘பீட்சா’ படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா முக்கியக் கதாபாத்திரங்களிலும், அம்பிகா, கருணாகரன், சங்கிலி முருகன் ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

பிற்பகல் 2 மணி – துப்பாக்கி – திரைப்படம்

விஜய், காஜல் அகர்வால் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த படம். மும்பைத் தாக்குதலைப் பற்றி விவரிக்கும் இந்தப் படம், தீவிரவாதக் கும்பலின் பின்னணியைத் தோலுரித்துக் காட்டுகிறது.

மாலை 5.30 மணி – ராஜா ராணி – திரைப்படம்

ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ், சந்தானம் என நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்த ரொமான்ஸ் படம். புதுமுக இயக்குநரான அட்லி இந்தப் படத்தை இயக்கியிருந்தார். ஃபிலிம் பேர், விஜய் அவார்ட்ஸ் என பல விருதுகளைக் குவித்த இந்தப் படத்தின் பாடல்களும் ஹிட்டடித்தன.

இரவு 9.30 மணி – நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம்

விஜய் டி.வி.யின் முதன்மை நிகழ்ச்சியான இது, முழுக்க முழுக்க பொழுது போக்கு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிறது. விஜய் டி.வி.யின் பிரபலமான முகங்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.

இரவு – 10.30 மணி – இரண்டாம் உலகம் – திரைப்படம்

செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா நடித்த படம். இந்தப் படத்தின் பாடல்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜும், பின்னணிக்கு அனிருத்தும் இசையமைத்திருந்தனர்.

விஜய் டி.வி.யின் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் பிளாக்பஸ்டர் படங்களோடு, இந்தப் பொங்கலை உற்சாகமாகக் கொண்டாடுங்கள்.