விஜய் டிவியில் ‘சந்திர நந்தினி’ சரித்திரத் தொடர்

chandra-nandni-vijay-tv-serial-s4tv

விஜய் தொலைக்காட்சி ‘சந்திர நந்தினி’ என்னும் ஒரு பிரம்மாண்ட தொடரை கடந்த திங்கள் முதல் ஒளிபரப்பி வருகிறது.

இந்த தொடர், மௌரிய காலத்தில் நடக்கும் கதையாகும். சந்திரகுப்த மௌரிய அரசரின் வாழ்க்கை மற்றும் அவரது மனைவி நந்தினி ஆகியோரைப் பற்றி விவரிக்கும் தொடராகும்.

பாடலிபுத்திரத்தை ஆண்ட தன நந்தாவின் மகள் நந்தினி. வீர மங்கையாக உலா வரும் இளவரசி நந்தினியின் வாழ்க்கை சந்திர குப்த மௌரிய அரசரால் தலைகீழாக மாறுகிறது.

சந்திரகுப்த மௌரியர் அரசர் தன நந்தாவை வீழ்த்தி அவரின் நாட்டை கைப்பற்றுகிறார். சந்திரகுப்த மௌரிய அரசர் மற்றும் நந்தினி ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் வெறுக்கும் பட்சத்தில், போர் முறையின் காரணமாக இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர்.

தனது பெற்றோர், நாடு, மக்கள் அனைவரையும் வீழ்த்தியதால் சந்திர குப்த அரசர் மீது நந்தினிக்கு வெறுப்பு ஏற்படுகிறது. தனது கணவனாயினும், சந்தோஷமான தன் குடும்பத்தை அழித்த சந்திர குப்த அரசரை நந்தினி வெறுக்கிறாள். அவனை பழி வாங்க தக்க தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறாள்.

ஆனால் காலம் கடந்து செல்லும் போது அனைத்தும் மாறிவிடுகிறது. சந்திர குப்த அரசரின் மீது நந்தினிக்கு உள்ள வெறுப்பு எப்படி அன்பாக மாறுகிறது என்பதே இத்தொடர்.

சுவேதா பாசு பிரசாத், இளவரசி நந்தினியாகவும், ராஜா தோகஸ் சந்திர குப்த மௌரிய அரசராகவும் நடித்துள்ளனர். ஏக்தா கபூர் தயாரிப்பில், ரஞ்சன் குமார் சிங் இயக்கியுள்ள தொடர் இது.

துரோகம், காதல், வீரம் ஆகிய அனைத்தையும் கலந்த ‘சந்திர நந்தினி’ தொடரை விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30க்கு காணுங்கள்.