நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி – நியூஸ் 50 நிகழ்ச்சி

news-50ஒரு நாளின் 24 மணி நேரத்தில் நடந்த ஒட்டு மொத்த நிகழ்வுகளையும் அரை மணி நேரத்தில் சுருக்கமாகவும் விரைவாகவும் 50 செய்திகளாகத் தொகுத்து தருகிறது நியூஸ் 7 தமிழ் சேனலின்”நியூஸ் 50 “நிகழ்ச்சி .

மாநில அளவில் நடந்த பத்து முக்கியமான செய்திகளில் இருந்து துவங்கும் நிகழ்ச்சி அடுத்தடுத்து மாவட்டம், தேசம், உலகம், சினிமா, விளையாட்டு, அறிவியல் என அனைத்து துறைகளிலும் அன்றை தினத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை பாரபட்சம் இன்றி முன்வைக்கிறது.

அரை மணி நேரத்தில் 50 செய்திகளைத் தருவது சவாலான விஷயம் என்ற போதும் செய்திகளை முழுமையாகவும் தரமாகவும் எந்த சமரசமின்றியும் தருவது இந்நிகழ்ச்சியின் தனிச் சிறப்பு.

ஒரு நாள் முழுக்க நீங்கள் தொலைக்காட்சிகளில் செய்திகளைப் பார்க்காவிட்டாலும் இரவு 10.00 மணிக்கு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் நியூஸ் 50 நிகழ்ச்சியைப் பார்த்தால் அன்றைய தினத்தின் அத்தியவாசியமான 50 செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.