பெப்பர்ஸ் டிவி – நம்மூர் ஆட்டம்

Nammoor Aattam-3திறமைகளை வைத்துக்கொண்டும் கனவுகளை சுமந்து கொண்டும் வாழ்க்கை நடத்தும் கிராமத்து கலைஞர்களை ஊக்குவிக்கும் புத்தம் புது நடன நிகழ்ச்சி பெப்பர்ஸ் டிவியின் நம்மூர் ஆட்டம்.

தமிழ்த்தொலைக்காட்சிகளில் முதல் முறையாக கிராமம் கிராமமாக சென்று அங்குள்ள நடனம் தெரிந்தவர்களை, நடன கலைஞர்களாக உலகத்துக்கு வெளிச்சம் காட்டும் விதமாக நம்மூர் ஆட்டம் நிகழ்ச்சி அமைந்திருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் பிரபல சினிமா நடன இயக்குனர் நடுவராக அவரது குழுக்களுடன் தமிழ்நாட்டு கிராமங்களுக்கு சென்று வயது வித்தாயசமின்றி நடனத்தில் விருப்பமுள்ளவர்களை ஆடச்சொல்லி வரிசைப்படுத்தி தரம் பிரித்து நடுநிலையோடு ஊக்கு வித்து அதில் தகுதியுள்ளவர்களை தேர்வு செய்து தேர்வு செய்யப்பட்டவர்களிடையே போட்டி நடத்தி நம்மூர் ஆட்டத்தில் யார் நம்பர் ஒன் என்பதை உலகுக்கு தெரிவிக்க இருக்கும் நிகழ்ச்சியே நம்மூர் ஆட்டம்.

இது ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.00 மணி முதல் 6.00 மணிவரை ஒளிபரப்பாக இருக்கிறது