புதிய தலைமுறை தொலைக்காட்சி – பெருஞ்செய்தி

peruncheithi-2ஒரு நாளில் ஏராளமான செய்திகள் கடந்துபோகின்றன. அரசியல், மனித உரிமை, அத்யாவசிய சேவைகள், அடிப்படை உரிமைகள், சுவாரஸ்யமான பதிவுகள், முக்கிய நிகழ்வுகள், திருப்பங்கள் என பலவிதமான செய்திகள் … இவற்றில் அந்த நாளின் முக்கியத்துவம் பெறும் செய்தியை 360 டிகிரியில் முற்றிலுமாக அலசி ஆராய்வதே புதிய தலைமுறையின் பெருஞ்செய்தி..

புதிய தலைமுறையில் நாள்தோறும், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.00 மணி முதல் அரைமணிநேரம் ஒளிபரப்பாகும் பெருஞ்செய்தியில் அரசியல் களம் முதல் மக்களின் அடிப்படை பிரச்னைகள் வரை விரிவாக பல வடிவங்களில் நேயர்கள் முன் வைக்கப்படுகிறது.

சொந்த கருத்துகளை சொல்லாமல் செய்தியின் தன்மையை பொறுத்து அவற்றின் பல புள்ளிகளை இணைத்து BIG PICTURE ஆக அளிக்கிறது பெருஞ்செய்தி.

ஒருசெய்திக்கு இத்தனை கோணங்களா? இப்படியும் தீர்வு இருக்க கூடுமோ? இந்த தீர்வு சரியாக இருக்குமோ என்று எண்ணத் தூண்டும் அளவுக்கு பிரச்னைகளையும் அவற்றுக்கான தீர்வுகளையும் விரிவான முறையில் சுவாரஸ்யம் குன்றாத வகையில் அளிக்கிறது பெருஞ்செய்தி.. நேயர்களுக்கு செய்தியின் அனைத்து கோணங்களையும் காட்டும் ஓர் ஆழமான அலசல் இந்த பெருஞ்செய்தி..