புதுயுகம் தொலைக்காட்சி – பலன்தரும் பரிகார கோவில்கள்

Rathnamangalam guberar koilபக்தி நிகழ்ச்சிகளை பயனுள்ள வகையில் ஒளிபரப்புவதில் முதன்மையானது புதுயுகம் தொலைக்காட்சி.

புதுயுகம் தொலைக்காட்சியானது “பலன்தரும் பரிகார கோவில்கள்” என்கிற நிகழ்ச்சியினை புத்தம் புதிதாக வடிவமைத்து, ஒவ்வொரு தலங்களையும் வித்தியாசமான கோணங்களில் அறிமுகப்படுத்தும் ஆன்மீகப் பணியில் தன்னை ஆத்மார்த்தமாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளது.

இவ்வகையில் கடந்த சில வாரங்களாக பிரதி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இருதினங்களும் காலை 8:00 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் இத்தொடரானது ஆன்மீக ஆர்வலர்கள், பக்தர்கள் என அனைவராலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது புதுயுகத்திற்கான புதிய செய்தி.

இந்து மதத்தின் முந்தைய வடிவமான ஷண்மதங்களின் அனைத்து தெய்வங்களையும் பாகுபாடில்லாமல், அவற்றின் ஒவ்வொரு திருத்தலங்களின் அரிய வரலாறு, பெருமைகள், அத்தலங்களைக் குறித்து அறியப்படாத பல புதிய தகவல்கள் என திருத்தலங்களின் மூர்த்தி, அவைதம் நேர்த்தி, காலத்தைவெல்லும் கீர்த்தி அனைத்தையும் அவற்றிற்குரிய அரிய புகைப்படங்கள், விளக்கக் குறிப்புகளை காட்சிப்படுத்தி இந்நிகழ்ச்சி விரிவாக விவரிக்கிறது.

ஒவ்வொரு கோவில்களின் தெய்வத்தின் சிறப்பியல்புகளை எடுத்துரைத்து, அத்தகைய தெய்வங்களை பிரார்த்தித்துக் கொள்வதால் நிவர்த்தியாகும் பிரச்சினைகள் எவையெவை? அவற்றை போக்கிக்கொள்ள மேற்கொள்ளப்படும் பரிகாரங்கள், அவற்றை செயல்படுத்தும் முறைகள் ஆகியவற்றை மிகத்துல்லியமாக எடுத்துக்கூறுவதே இந்நிகழ்ச்சியின் மிக முக்கிய அம்சமாகும்.

பொதுமக்களுக்கு பயனளிக்கும் பரிகாரங்கள் குறித்த வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வூட்டும் நற்பணியை இத்தொடர் செய்துவருகிறது என்பதில் இருவேறு கருத்தில்லை. இதனால் இத்தொடரானது ஒளிபரப்பாகத் துவங்கிய குறுகியகால அளவிலேயே அனைத்து மக்களின் நெஞ்சங்களிலும் இடம்பிடித்துள்ளது என்பது பாராட்டத்தக்க ஒன்றாகும்.

இந்நிகழ்ச்சியில் இதுவரை ஒளிபரப்பான பரிகாரகோவில்கள்:
1. செட்டிபுண்ணியம் ஹயக்ரீவர் திருக்கோவில்
2. எழுச்சூர் நல்லிணக்கீஸ்வரர் திருக்கோவில்
3. குன்றத்தூர் காத்யாயினி அம்மன் திருக்கோவில்
4. ரத்னமங்கலம் குபேரர் திருக்கோவில்
5. நென்மேலி லெக்ஷ்மி நாராயணர் திருக்கோயில்
6. திருக்கச்சூர் மருந்தீஸ்வரர் திருக்கோவில்
7. பழைய பெருங்களத்தூர் மதுரகாளியம்மன் திருக்கோவில்
8. செங்குன்றம் அருள்மிகு சொர்ணாம்பிகை உடனுறை புஷ்பரதேஸ்வரர் திருக்கோவில்