புதுயுகம் தொலைகாட்சி – சிநேகிதியே – தொடர்

Snegithiye-5புதுயுகம் தொலைகாட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமைவரை இரவு 8.30 மற்றும் காலை 11.00 மணிக்கு சிநேகிதியே தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்ததொடர் சமுதாயத்தில் உள்ள ஆணாதிக்கத்தை உடைத்து நினைத்ததை சாதிக்க முயற்சிக்கும் மூன்று பெண்களின் கதை.

இஷா, ஜியாசென், ரேவதி ஆகியோர் ஒரே வீட்டில் வாழும் உற்ற சிநேகிதிகள், இவர்கள் மூவரும் பாரதிகண்ட புதுமை பெண்களை போல சமுதாயத்தின் பழமைகளை கலைந்து புதுமைகளை படைக்க முயற்சிக்கின்றனர்.

இஷா பிரபலமான ஒரு தொலைகாட்சி நிறுவனத்தில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக பணிபுரிகிறார், இஷாவின் வளர்ச்சியை விரும்பாத சக ஆண் பணியாளர்கள் அவளுடைய வளர்ச்சியை தடுக்க பல வழிகளில் அவளுக்கு இன்னல்களை தருகின்றனர்.

மும்பையின் மிகப்பிரபலமான டி.ஜேக்களில் ஒருவராக இருக்கும் ரேவதி, இந்த ஆண்டு மும்பையில் நடக்க இருக்கும் உலக அளவிலான டி.ஜே போட்டியில் வெற்றிபெறுவதை வாழ்க்கையின் லட்சியமாக கொண்டிருக்கிறாள்.

ஜியாசென் மீடியாவில் ஒரு மிகப்பெரிய ரிப்போர்ட்டராக புகழ்பெறவேண்டுமென நினைத்து சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக நடிகர், நடிகையரை பற்றி கிசுகிசு எழுதும் ரிப்போர்ட்டராக ஒரு சினிமா பத்திரிக்கையில் வேலைசெய்து கொண்டிருக்கிறாள்.

தொழில் ரீதியாக தனித்தனியே பல போராட்டங்களை சந்தித்துவரும் இவர்களுக்கு பொதுவாக ஒரு பிரச்னை வருகிறது.

மூவரும் ஒன்றினைந்து புதிதாக வந்த பிரச்னையை தீர்த்தார்களா…? தொழில்ரீதியான போட்டிகளில் வென்று நினைத்ததை சாதித்தார்களா சிநேகிதிகள் என சுவாரஷ்யமாக செல்கிறது “சிநேகிதியே” தொடர்.