புதுயுகம் தொலைகாட்சி – யாவரும் கேளீர்

Yavarum-Keleer---1புதுயுகம் தொலைக்காட்சி பல்வேறு புதிய நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.

அந்த வரிசையில் உலகெங்கிலும் உள்ள புதிய பேச்சாளர்களை பல கட்ட நேர்முக தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுத்து தமிழ் சமூகத்திற்கு அறிமுக படுத்தும் வகையில் “ யாவரும் கேளீர் “ நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.

தேர்ந்தெடுக்கப்படும் பேச்சாளர்கள் பல்வேறு தலைப்புகளின் கீழ் விவாதிக்கின்றனர் .

மதுரை ,திருச்சி ,ராசிபுரம் ,ஈரோடு ,பெரம்பலூர் ,நாமக்கல் ,கோபிச்செட்டிபாளையம் ,மணப்பாறை மற்றும் மும்பை போன்ற இடங்களில் மக்கள் மத்தியில் ‘யாவரும் கேளீர்’ பேச்சரங்க நிகழ்ச்சிக்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது .

புதிய பேச்சாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றார்கள் .சிறந்த பேச்சாளர்களை அடையாளம் காட்டுவது தான் இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

பேராசிரியர்.முனைவர். கு.ஞானசம்பந்தன் இந்நிகழ்ச்சியின் நடுவராக இருந்து பேச்சாளர்களை நெறிபடுத்துகிறார்.

”யாவரும் கேளீர் “ நிகழ்ச்சி அனைத்து தரப்பினரையும் கவரும் விதத்தில் புதுயுகம் தொலைகாட்சியில் ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.