சத்தியம் தொலைக்காட்சி – உணவே மருந்து – மருந்தே உணவு

Vidiyalai Noeki 7இந்திய தொலைக்காட்சியில் முதல் முறையாக, இயற்கை மருத்துவத்தின் மகத்துவத்தை உணர்த்த வருகிறது, வரும் ஞாயிறு 06.03.2016 சத்தியம் TV’ல் உதிக்கவிருக்கும் “விடியலை நோக்கி.”

”உணவே மருந்து – மருந்தே உணவு என்கிறது இயற்கை மருத்துவம். ஆனால் நாட்டு மருத்துவங்களை மாற்று மருத்துவமாக்கியது மேற்கத்திய மருத்துவம்! மருத்துவர் இல்லாமல் நோயாளி வாழலாம், ஆனால் நோயாளி இல்லாமல் மருத்துவர் வாழ முடியுமா? கேள்வி எழுப்பும் மக்கள் மருத்துவர்கள்…!

அரசு மருத்துவமனையை நம்பாத நோயாளிகள்… இதையே சாதகமாக்கி லாபம் கொழிக்கும் தனியார் மருத்துவமனைகள்! பிராண்ட் நேம் என மருந்து நிறுவனங்கள் கொள்ளை … இதற்கு மருத்துவர்களும் துணை போகும் கொடுமை.. பணம் உள்ளவருக்கு சிகிச்சை… இல்லாதவருக்கோ நோயை சகித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம்.

மனித சமூதாயத்தின் ஆரோக்கியத்தை மையப்படுத்தி முன்னேறிய மருத்துவத் துறை, வர்த்தக லாபத்தை மட்டுமே குறிக்கோளாக்கியது எப்படி ? விடையளிக்க விளைகிறது விடியலை நோக்கி.