ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சி – ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஸ்தோத்ரம்

mahalakshmi stuthi 3பொதுவாக லட்சுமியை செல்வத்தின் அதிபதி என்பர். செல்வம் என்பது பணத்தை மட்டும் குறிப்பதில்லை. பாரம்பரியமான வாழ்க்கை முறைகளும் செல்வம் எனப்படும்.

நமது குடும்பம் மற்றும் அதன் முன்னேறற்றமும் செல்வம் ஆகும்.

நமது உடைமைகள் ஆன நிலம், வீடு, பிராணி, தானியங்கள் இவை மட்டும் அல்லாது நற்பண்புகள் ஆன பொறுமை, நல்லொழுக்கம், தூய்மை போன்ற நல்ல குணங்களும் நமது பெருமை மற்றும் வெற்றியும் கூட நமது செல்வங்களே ஆகும்.

மகாலட்சுமி ஸ்லோகத்தினை தினமும் படிப்பதினால் (1) புகழ் (2) அறிவு (3) தைரியம் மற்றும் வலிமை (4) வெற்றி (5)நல்ல குழந்தைகள் (6) கீர்த்தி (7) தங்கம் மற்றும் இதர சொத்துக்கள் (8)தேவையான அளவு தானியங்கள்(9) மகிழ்ச்சி(10) பேரின்பம்(11) புத்திகூர்மை (12) அழகு (13) உயர் சிந்தனை, குறிக்கோள் மற்றும் சிறந்த தியான நிலை (14) அற நெறி மற்றும் நெறி முறைகள்(15) நல்ல ஆரோக்கியம்(16) நீண்ட ஆயுள் அஷ்ட லட்சுமி யின் ஒவ்வொரு வடிவத்தின் மகிமையை பற்றியும் நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சி உலகெங்கிலும் உள்ள நேயர்களின் நன்மைக்காக ஸ்ரீ மகாலட்சுமி ஸ்தோத்ரத்தினை ஒளிபரப்புக்கிறது.

ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஸ்தோத்ரம் திங்கள் முதல் ஞாயிறு வரை தினமும் காலை 6.15 மணிக்கு ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது .