வானவில் தொலைக்காட்சி – மாலினி ஐயர் – குடும்பத்தொடர்

Sridevi 4
பெரிய திரையில் கதாநாயகியாக நடித்த ஸ்ரீதேவி, முதல் முறையாக சின்னத்திரையில் “மாலினி ஐயர்” என்ற மாறுபட்ட குடும்ப தொடரில் நடிக்கிறாள்.

இத்தொடர் வானவில் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வௌளி வரை இரவு 7.00 மணிக்கு ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கிறது.

தமிழ் பிராமணப்பெண்ணான மாலினி ஐயர் ஒரு பஞ்சாபி பையனை திருமணம் செய்துக் கொள்கிறாள். தன் புகுந்த வீட்டுக்கு வந்ததும் கலாச்சாரமும், மொழியும் அவளுக்கு பெரிய பிரச்சனையாக இருக்க, அதில் இருந்து எப்படி வெளிவந்தாள்.

அந்த வீட்டில் உள்ள அனைவரது மனதிலும் இடம்பிடித்து தமிழ் கலாச்சாரத்தை கட்டிக்காத்து வாழ்க்கை நடத்துகிறாள் என்பதை தொடரில் காணலாம்.