வேந்தர் டிவி – ஹலோ டாக்டர் – நேரலை மருத்துவ நிகழ்ச்சி

hello-doctor-3வேந்தர் டிவியில் திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் காலை 11.30 மணிக்கு நேரலையாக ஒளிபரப்பாகும் மருத்துவ நிகழ்ச்சி தான் ஹலோ டாக்டர்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்கள் கலந்துகொண்டு தொலைபேசியில் நேயர்களின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கிறார்கள். விரிவான மருத்துவ ஆலோசனைகளும் வழங்குகிறார்கள்.

குறிப்பாக குழந்தை நலம், மகப்பேறு, இருதய நோய், பிளாஸ்டிக் சர்ஜரி, பல் பிரச்சினைகள், நரம்பியல் மற்றும் சிறுநீரக நோய்கள் குறித்து பல்வேறு விதமான கேள்விகளுக்கு விரிவான ஆலோசனைகள் வழங்கியதில் ஏராளமான நேயர்கள் பலன் அடைந்துள்ளனர்.

நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும் இந்த நிகழ்ச்சி மறு ஒளிபரப்பாக இரவு 12.00 மணிக்கு மீண்டும் ஒளிபரப்பு செய்யப்படும்.