வேந்தர் டிவி – V -வாய்ஸ் – புதிய இசை நிகழ்ச்சி

v-voice-4வேந்தர் டிவியில் மிகவும் பிரமாண்டமான முறையில் ஒளிபரப்பாகும் புத்தம் புதிய இசை நிகழ்ச்சி V -வாய்ஸ் .

சென்னையில் வண்ணமயமான பிரமாண்டமான அரங்குகளில் முதல் சுற்றில் தேர்வான வர்களுக்கு இறுதிக்கட்ட போட்டிகள் நடைப்பெற்றுக் கொண்டிருகிறது . இந்நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் இரவு 8.00 மணிக்கு வேந்தர் டிவியில் ஒளிபரப்பாகிறது .

தமிழ்நாடு முழுவதும் 7மண்டகலாக பிரித்து குரல் தேர்வு நடத்தப்பட்டது ,இதுவரைக்கும் தமிழ்நாட்டில் குரல் தேர்வு நடத்தாத இடங்களில் கூட தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது அங்கெல்லாம் போட்டியாளர்கள் ஆர்வமாக கலந்துகொண்டனர் .அங்கு ஒவ்வொரு மண்டலங்களில் தேர்வு செய்யப்பட்ட மூன்று அல்லது நான்கு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு .புதிய சுற்றுகளுடன் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் இனிய பாடல்களை தேர்ந்தெடுக்கும் நடுவர்காளாக பிரபல பின்னணி பாடகர் பிரசன்னா ,பிரபல திரைப்பட நடிகை ஆன்ட்ரியா ,பிரபல பின்னணி பாடகர் நரேஷ் அய்யர் போன்றோர் நடுவர்களாக இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலும் 1990 காலக்கட்டங்களில் பயணிக்கப்பட்ட பிரபலமான பாடல்கள் அரங்கேற்றப்பட்டு அந்த சுற்றுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன .சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் S.A ராஜ்குமார் மற்றும் விக்ரமன் கலந்து கொண்டனர் .

தற்போது இதில் டெடிகேஷன் சுற்று நடைபெறுகிறது .இந்த சுற்றில் பாடும் பாடலை தங்களுக்கு விருப்பமானவர்களுக்கு தாய் ,தந்தை ,குரு ,நண்பர்களுக்கு அர்ப்பணிக்கும் சுற்றாக அமைகிறது .