நன்றி மறக்காத சிவகார்த்திகேயன்…

vijay tv sivakarthikeyan kpyவிஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ‘வின்னர்’ டைட்டில் வென்ற சிவகார்த்திகேயன் இன்று தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கிறார்.

இடையில் சில காலம் நடத்தப்படாமல் இருந்த ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சி விஜய் டிவியில் புதுப் பொலிவுடன் வரும் ஞாயிறு 19ம் தேதி மதியம் 2 மணி முதல் ஒளிபரப்பாக உள்ளது.

தன்னை வளர்த்து விட்ட இந்த நிகழ்ச்சிக்கான முன்னோட்ட வீடியோ ஒன்றில்,  சிவகார்த்திகேயன் நடித்துக் கொடுத்திருக்கிறார்.

ஏறி வந்த ஏணியை மறக்காமல் இருக்கும் சிவகார்த்திகேயனின் இந்த நன்றியுணர்ச்சி அவரை இன்னும் ஏற்றம் பெற வைக்கும் என விஜய் டிவி வட்டாரத்தில் நெகிழ்ச்சியுடன் இருக்கிறார்களாம்.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள விஜய் டிவி – கலக்கப் போவது யாரு – Promo – Video